சென்னை,
தமிழ்நாட்டில் வரும் 23-ந் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு விவரங்களை அனைவரும் கண்டறியும் வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதற்காக இசிஐநெட் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் 'வோட்டர் டர்ன் அவுட்' என்ற பிரிவில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு முறை, வாக்களித்த மக்களின் எண்ணிக்கையை சதவீதம் அளவில் வெளியிட தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு தொகுதியிலும் நடக்கும் வாக்குப்பதிவு விவரங்களை இந்த செயலி மூலம் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை எளிதாக பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.
இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.