சென்னை,
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வரும் 23-ந்தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு விவரங்களை அனைவரும் கண்டறியும் வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக இசிஐ நெட் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதில் 'வோட்டர் டர்ன் அவுட்' என்ற பிரிவில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒருமுறை, வாக்களித்த மக்க ளின் எண்ணிக்கையை சதவீதம் அளவில் வெளியிட தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன்படி. ஒவ்வொரு தொகுதியிலும் நடக்கும் வாக்குப்பதிவு விவரங்களை இந்த செயலி மூலம் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை எளிதாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.