சென்னை,
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தமிழக முதல்-அமைச்சர் விஜய், கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 5 இடங்களுக்கு மட்டும்தான் நேரில் சென்று பிரசாரம் செய்தார். ஆனால் இடைத்தேர்தலுக்காக ஒரு தொகுதியில் மட்டுமே 39 முறை சாலையில் இறங்கி வீதி வீதியாக பிரசாரம் செய்தார்.
மேலும் ஓட்டுக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள். இடைத்தேர்தலில் கிடைத்த ஓட்டுகள் எல்லாம் ஆளுங்கட்சிக்காக போடப்பட்ட ஓட்டுகள்தான். எனவே, இடைத்தேர்தலை வைத்து வாக்கு சதவீதத்தை நாம் கணிக்க முடியாது.
முதலில் முதல்-அமைச்சர் விஜய் வீட்டிற்குள் இருந்தார். அதனால் அவரை வெளியே வரச்சொன்னோம். இப்போது வீதிக்கு வந்திருக்கிறார். அதனால் அவரிடம் விஷயத்தை சொல்கிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.