கோவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விஎஸ் பாபு இறுதி ஊர்வலத்தின் போது, விஜய் மீது துரும்பு கூட விழாத வகையில் சென்றேன். நான் கொடுக்கும் பாதுகாப்பு 100 பேராலும் கொடுக்க முடியாது. முதலமைச்சருடன் நடக்கும் போது என் கையை பிடித்து இழுத்தார்கள். அமைச்சரை பார்த்து நான் கை நீட்டி பேசவில்லை. அவர் அமைச்சர் என்றே எனக்கு தெரியாது. என் கையை பிடித்து இழுத்தவரை, உன் வேலையை பார்த்துட்டு போ என கூறினேன்.
நான் யாரையும் திட்டவில்லை. நான் யாரின் கையையும் பிடித்து இழுக்கவில்லை. இது அரசியலில் தவறா. ஊடகங்கள் திமுகவுக்காக ஏஜெண்ட் வேலை பார்க்கின்றன. திராவிட இயக்கத்திற்கு பாதுகாப்பாக இருக்க திமுக கூட்டணியில் இணைந்தோம். எங்களை அவமானப்படுத்தினார்கள். திமுவுடன் இருக்கக் கூடாது என்பதை மதிமுகவின் பொதுக்குழு முடிவு செய்து, கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம். கொள்கைகாக தான் கூட்டணி விட்டு வெளியே வந்தோம்.
பிரதமர் மோடி தனக்கு பல வாய்ப்புகளை வழங்கியபோதும், தவறான முடிவுகளை எதிர்த்துக் கருத்து தெரிவித்து வெளியேறியுள்ளேன். முதல்வர் விஜய் தன்னை அண்ணன் என்று அழைத்ததன் காரணமாகவே அவரைச் சந்தித்தேன். விஜய் நேர்மையான ஆட்சியை நடத்தி வருகிறார். ஊழல்வாதிகள் யாரும் அவரை நெருங்க முடியாது.
சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்கத் தான் தயாராக இருக்கிறேன். திமுக அதற்குத் தயாரா? திருப்பரங்குன்றம் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது. மதிமுகவை அழிக்க கருணாநிதி முயற்சி செய்தார். எங்களை இனி யாராலும் முடியாது. மேகதாது பிரச்சனைக்கு முதலில் போராடியவன் நான். தமிழ்நாட்டின் முதலீடு ஆந்திராவுக்கு செல்லவில்லை” என்றார்.