தமிழக செய்திகள்

வி.எஸ்.பாபு மறைவு - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக இன்று பிற்பகல் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்

அந்த வகையில் வி.எஸ். பாபு மறைவுக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

“கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT