தமிழக செய்திகள்

வார்டு பகுதி சபை கூட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியின் ஆர்.வி.நகரில் வார்டு பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சியின் 23-வது வார்டு ஆர்.வி.நகரில் வார்டு பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் இளமதி தலைமை தாங்கினார். இதில் ஆர்.வி.நகர், முனியப்பன் கோவில்தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பாக பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டன. அப்போது சாக்கடை கால்வாய் கட்ட வேண்டும், தெருநாய்கள் தொல்லையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மேயர் உறுதியளித்தார். இதில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், லாவண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT