தமிழக செய்திகள்

இனிய ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்

கருவிகள் முதல் தொழில்கள் வரை அனைத்தையும் மதித்து வணங்கிடும் திருநாள் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

உழைப்பின் மேன்மையையும், அறிவின் ஆற்றலையும் போற்றி வணங்கும் ஆயுதபூஜை மற்றும் தீமைகளை வென்று நன்மை வெற்றி பெறுவதைக் குறிக்கும் விஜயதசமி திருநாள்களில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்பே உயர்வு தரும் என்ற உயரிய சிந்தனையை மனதில் ஏந்தி, நாம் பயன்படுத்தும் கருவிகள் முதல் நாம் சார்ந்திருக்கும் தொழில்கள் வரை அனைத்தையும் மதித்து வணங்கிடும் திருநாளாம் ஆயுதபூஜையும், நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றியையும் உழைப்பிற்கேற்ற பலனையும் வழங்கிடும் நன்னாளாம் விஜயதசமியும், தடைகளைத் தகர்த்திடும் மனவலிமையையும், புதிய இலக்குகளை நோக்கிப் பயணித்திடும் ஊக்கத்தையும் அளித்து, வாழ்வில் மென்மேலும் முன்னேற வழிவகுக்கட்டும்.

இத்தகைய சிறப்புமிக்க திருநாள்களில், மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும், அன்பும், வளமும், மகிழ்ச்சியும் பெருகிடவும், தமிழகமெங்கும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் தழைத்தோங்கிடவும் வாழ்த்தி, அனைவருக்கும் எனது இனிய ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT