தமிழக செய்திகள்

குற்றாலம் ஐந்தருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் - சுற்றுலா பயணிகள் உற்சாகம்

ஞாயிறு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகள் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 24-ந்தேதி முதல் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்த கொட்டி வருகிறது. ஞாயிறு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.