தமிழக செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,264 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரத்து 264 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

மேட்டூர்,

மேட்டூர் அணை

கடந்த 3 நாட்களாக கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத் துக்கு காவிரியில் வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று அது வினாடிக்கு 11 ஆயிரத்து 42 கனஅடியாக குறைக்கப்பட்டது. அதேநேரத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 905 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலையில் வினாடிக்கு 19 ஆயிரத்து 264 கனஅ டியாக அதிகரித்தது. இதன்காரணமாக அணை நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் 74.01 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மாலையில் 76.18 அடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 1½ நாளில் அணை நீர்மட்டம் சுமார் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.