தமிழக செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,738 கன அடியாக அதிகரிப்பு!

அணையில் நீர் இருப்பு 21.32 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 433 கன அடியில் இருந்து 4,738 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரின் அளவு அதிகரித்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதன்படி, அணைக்கு வினாடிக்கு 4,738 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.31 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 21.32 டி.எம்.சி.யாக உள்ளது.

அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவனித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT