தமிழக செய்திகள்

90 அடியை நெருங்கும் நீர்மட்டம்... மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா?

காவிரி ஆற்​றில் தண்​ணீர் திறந்து விடப்​பட்​டுள்ள நிலை​யில், மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரித்துள்ளது.

சேலம்,

மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் டெல்டா பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் காய்ந்து வருகிறது. கர்​நாடக அணை​களில் இருந்து காவிரி ஆற்​றில் தண்​ணீர் திறந்து விடப்​பட்​டுள்ள நிலை​யில், மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரித்துள்ளது.

விநாடிக்கு 13,538 கனஅடி​ தண்ணீர் வருகிறது. அணை​யில் இருந்து குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 2,000 கனஅடி தண்​ணீர் திறக்கப்​பட்டு வரு​கிறது. வரும் நீரின் அளவைவிட வெளியேற்​றப்​படும் நீரின் அளவு குறை​வாக இருப்​ப​தால், நீர்​மட்​டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மேலும் மேட்டூர் அணை நீர்மட்டம் 87அடியை நெருங்கி உள்ளது. அணை நீர்மட்டம் நேற்று மாலை 86.83 அடியாக உள்ளது. தற்போதைய அளவில் நீர்வரத்து காணப்பட்டால், அணை நீர்மட்டம் அடுத்த சில நாட்களில் 90 அடியை எட்டி விடும். அதன்பிறகும் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் சூழல் உருவாகலாம் என்று பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.