கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

தண்ணீர் திறப்பால் 25250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கோவை,

அமராவதி அணையிலிருந்து நாளை முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, அமராவதி பிரதான கால்வாயின், புதிய பாசனப் பகுதிகளில் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் பொருட்டு 20.06.2025 முதல் 05.07.2025 முடிய 15 நாட்களுக்கு, அமராவதி அணையின் பிரதானக் கால்வாய் மதகு வழியாக 440 கன அடி / வினாடி வீதம் 570.24 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 25,250 ஏக்கர் அமராவதி அணை புதிய பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.