சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தற்போது நீர் இருப்பை கருத்தில் கொண்டு, பருவகால புன்செய் பயிரிடுவதற்கு வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாய்களில் 25.07.2026 முதல் 21.11.2026 வரை மொத்தம் 120 நாட்களுக்கு முதல் போக புன்செய் பயிர் சாகுபடி பாசனத்திற்கு சுழற்சி முறையில் முதல் மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும், இரண்டாவது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும், மொத்தம் 10 நாட்களுக்கு தண்ணீர் விட்டும், 5 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், தவணை ஒன்றுக்கு 76.23 மில்லியன் கனஅடி வீதம் 8 தவணையாக மொத்தம் 609.84 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சூளகிரி வட்டத்திலுள்ள 8000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.