மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 3,000 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வயல்களுக்கும், கடைமடைப் பகுதிகளுக்கும் தேவையான தண்ணீர் மழையின் மூலம் கிடைத்து வருகிறது.
இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை கணிசமாகக் குறைந்துள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரை வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது வினாடிக்கு 1,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பாசனத் தேவை குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.