தமிழக செய்திகள்

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று காலை கல்லணையை எட்டியது.

திருச்சி,

மேட்டூர் அணை நீர்மட்டம்

காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 3 நாட்களாக 7 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு வந்து கொண்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.25 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 8,075 கன அடியாகவும், நீர் திறப்பு 7 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.

கல்லணை இன்று திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையை தாண்டி நேற்று காலை கல்லணையை எட்டியது. திறக்கப்பட்ட தண்ணீர் குறைவான அளவிலேயே வந்ததால் நேற்று மாலை வரை கல் லணை நிரம்பவில்லை. கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளின் மதகுகளின் ஓரமாக தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

6 அமைச்சர்கள்

விழாவில் அமைச்சர்கள் ஆனந்த், வினோத், ரமேஷ், ஷாஜகான், முகமது பர்வேஸ், ராஜ்குமார் ஆகிய 6 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். விழாவில் விஜய் சரவணன் எம்.எல்.ஏ., தஞ்சை மாவட்ட கலெக்டர் ரேவதி, நீர்வள ஆதாரத்துறை தலைமை என்ஜினீ யர் ஜெயக்குமாரி, கண்காணிப்பு என்ஜினீயர் திலீபன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

விழாவையொட்டி அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கல்லணை ஆய்வு மாளிகையில் இருந்து மேள, தாளம் முழங்க அழைத்து வரப்படுவார்கள். கொள்ளிடம் ஆற்றில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், சிறுவர் பூங்கா பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவில், கருப்பண்ணசாமி கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற உள்ளது.

SCROLL FOR NEXT