தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (19.11.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக அன்றைய தினம் தூத்துக்குடி மாநகரின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் இருக்காது எனவும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடிநீரை சேமித்து வைத்துக்கொள்வதுடன், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.