தமிழக செய்திகள்

அமராவதி அணையில் இருந்து நாளை முதல் 23-ந் தேதி வரை தண்ணீர் திறப்பு

பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து இன்று முதல் 23-ந் தேதி வரை தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவிற்கு இணங்க, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, ஆற்று மதகு வழியாக, தாராபுரம் நகராட்சியின் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் 19-ந் தேதி (நாளை) முதல் 23-ந் தேதி முடிய 4 நாட்களுக்கு, 224.64 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.