தவெக ஆட்சி 
தமிழக செய்திகள்

தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவை நாங்கள் அளிக்கவில்லை - பெ.சண்முகம் பேட்டி

த.வெ.க அரசிடம் இன்னும் ஜனநாயகப்பூர்வமான அணுகுமுறை தேவை என பெ.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னை,

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரம் தமிழக அரசியலில் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகிறது. இந்த நிலையில், “முதல்-அமைச்சர் விஜய் இறுதி முடிவே எடுக்கவில்லை என்றால், புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக அரசாணை எப்படி வெளியானது?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

புதிய தலைமைச் செயலகத்தைப் பட்டினப்பாக்கத்தில் அமைப்பது குறித்து, முதல்-அமைச்சர் இறுதியான முடிவு எதையும் எடுக்கவில்லை என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர்இறுதியான முடிவை எடுக்காமல் எப்படி அரசாணை (எண் 564) வெளியானதுஎன்ற சாதாரண கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்.

சீனிவாசபுரத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அரசின் முடிவை அந்த அரசாணை வெளிப்படுத்துகிறது.

முதலமைச்சருக்கே தெரியாமல் அரசாணை வெளிவந்திருக்கிறது என்றால், அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, முதலமைச்சரின் ஒப்புதலோடுதான் வந்துள்ளது என்றால் அது தவறான முடிவு. ஆகவே, இடத்தை மாற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ளது. மாற்று இடங்களையும் நாங்கள் தெரிவித்துள்ளோம்.

இது தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலனிலிருந்து நாங்கள் வைக்கும் கோரிக்கையே தவிர வேறில்லை. த.வெ.க இல்லாமல் வேறு யார் ஆட்சியில் இருந்தாலும் இதே கோரிக்கையைத்தான் நாங்கள் வைத்திருப்போம். ஆகவே, த.வெ.க-விற்கு எதிரான கோரிக்கையோ, போராட்டமோ இதுவல்ல. தலைமைச் செயலகம், சட்டமன்றம், சட்டமன்ற உறுப்பினர் விடுதி போன்ற நிரந்தரமான கட்டுமானங்கள், பொருத்தமான இடத்தில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் எல்லோரது விருப்பமும்.

அதற்கான இடங்கள் சென்னை மாநகரத்திற்குள்ளேயே பல இருக்கும்போது, பிடிவாதமாக மீனவர் குடியிருப்புகளைப் பாதிக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது என்பது தவறான விஷயம் என்பதை நான் தெரிவித்துள்ளேன்.

த.வெ.க அரசிடம் இன்னும் ஜனநாயகப்பூர்வமான அணுகுமுறை தேவை. அவர்கள் பல விஷயங்களைத் தன்னிச்சையாக முன்னெடுக்கிறார்கள்; தன்னிச்சையாக அறிவிக்கிறார்கள். ஆளுங்கட்சியாக இருந்தாலும், பல விஷயங்களில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது, கலந்துரையாடல் நடத்துவது, ஜனநாயகப்பூர்வமான விவாதத்திற்கான வாய்ப்பை உருவாக்குவது என்பதுதான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அத்தகைய அணுகுமுறை என்பது அவர்களிடத்தில் இல்லை. தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு நாங்கள் அளிக்கவில்லை.

அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கொண்டதவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல். இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று என்றார்.

SCROLL FOR NEXT