தமிழக செய்திகள்

தீய சக்திகளிடம் கவனமாக இருக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தீயசக்திகளிடம்ஏமாந்து போய்விட்டால் விடியல் என்பதே இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார் ஜெயலலிதா. சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக அதிமுக செயல்பட்டு வருகிறது. அரசியலில் சிலர் பரம்பரை பரம்பரையாக பதவியை அனுபவித்து வருகிறார்கள்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக யேசுபிரான் போதித்த போதனகள் இன்றைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும் . ஏசு பிரான் தீய சக்திகளை அழிக்க உலகத்துக்கு ஒலியாக வந்தார். தீய சக்திகளாக இருப்பவர்களை ஒலியின் வேஷம் தரித்தவர்கள் என்றும் அவர்களிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தினார் என்றார். 

மேலும் குட்டிக்கதை ஒன்றை கூறிய எடப்பாடி பழனிசாமி, ஆட்டுத்தோலை போர்த்தி வந்த ஓநாய்களை போல வருவோரிடம் சிறுபான்மை மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தீயசக்திளிடம் ஏமாந்து போய்விட்டால் விடியல் என்பதே இருக்காது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக பாடுபடும் இயக்கம் என்றார்.