தமிழக செய்திகள்

மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்: முதல்-அமைச்சர் விஜய்

பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது என முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று மீனவர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக மீனவர்கள் தினம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வளர்ச்சிக்கு பெரும்பங்கு

தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.

மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும்.

மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT