வன்னி அரசு 
தமிழக செய்திகள்

திமுகவை தற்போதும் நேசிக்கிறோம்;அமைச்சர் வன்னி அரசு பரபரப்பு பேச்சு

விசிக தலைவர் திருமாவளவனும் தானும் திமுகவை நேசிக்கிறோம் ஆனால் திமுக எங்கள் கட்சி மீது வன்மத்தோடு செயல்படுகிறது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் முதல் அமைச்சர் விஜய் உத்தரவுபடி கேக் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் என்ற முறையில் தான் குழந்தைகளுக்கான வாழ்த்து அட்டையில் விஜயின் படம் இடம் பெற்றுள்ளது. அதில் ஒன்றும் தவறும் இல்லை. எல்லா அரசுகளும் முதல் அமைச்சர் படம் தான் போடுகிறார்கள்.

செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை சுணக்கம் ஏற்பட வில்லை. தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். எந்த குளறுபடியும் இல்லை. குழப்பமும் இல்லை. 5 ஆண்டுகள் நல்லாட்சியாக தொடரும். சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் ஒவ்வொரு பிரச்சினையையும் காவல்துறை உடனடியாக தீவிரமாக கையாள்கிறது. காவல்துறை மெத்தனமாக இல்லை. எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பரப்புகிற பரப்புரை அவ்வளவுதான்.

நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் திமுகவை நேசிக்கிறோம். நாங்கள் அவர்களுக்கு பதில் சொல்வதால் அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களை இப்போதும் நேசிக்கிறோம். திமுக எங்கள் மீது வன்மத்துடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உரிமைத் திட்டத்தில் அவர்கள் அளித்த அறிக்கையே சான்று” என்று கூறினார்.

SCROLL FOR NEXT