சென்னை,
விஜய்யின் அரசியல் தாக்கம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசி இருப்பதாவது;
”விஜய்யை குறைத்து மதிப்பிட்டோம். அவர் குறிப்பிட்ட சதவீதம் வாக்கு பெறுவார் என நினைத்தோம், ஆனால் அதை தாண்டி சீட்டாகவும் மாறிவிட்டது. அவர் தேர்தலில் தவெக மற்றும் திமுகவுக்கு இடையே போட்டி என கூறினார். ஆனால் அதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் அதிமுக, திமுக வேண்டாம் என மார்கெட் இருக்கு, அதை யாரும் அறுவடை செய்யவில்லை. அவர் ஒரு பாப்புலர் ஸ்டார் அதனால் இளைஞர்கள், திராவிட கட்சிகள் மீது பாசப்பினைப்பு இல்லாதவர்கள், சோசியல் மீடியா மூலம் அரசியலை உள்வாங்கி கொண்டவர்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளனர்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.