தமிழக செய்திகள்

காயிதே மில்லத்தின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்

காயிதே மில்லத் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது அளப்பரிய பற்று கொண்டிருந்தார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

இஸ்லாமிய சமுதாயத்தின் ஈடு இணையற்ற தலைவராக விளங்கியவரும், நம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது அளப்பரிய பற்று கொண்டிருந்தவருமான பெரியவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்த தினம் இன்று.

மக்கள் பிரதிநிதி

தாய் நாட்டின் நலனே தனது நலனாக கருதி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்ததோடு, அநீதிக்கும், அடக்குமுறைக்கும் ஆளான மக்களின் பிரதிநிதியாக நின்று அவர்களின் மேம்பாட்டிற்காக அல்லும் பகலும் பாடுபட்ட கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.