தமிழக செய்திகள்

சமூக நீதி களத்தை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் என்றும் துணையாக இருப்போம்: வன்னி அரசு

முதல்-அமைச்சர் விஜயை எனது இணையர் ஆதிரை, மகன்கள் பைந்தமிழ் வளவன் மற்றும் செந்தமிழ் திலீபன் ஆகியோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றேன் என வன்னி அரசு தெரிவித்தார்.

சென்னை,

தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு அமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

வன்னி அரசு தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இன்று தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை, எனது இணையர் ஆதிரை, மகன்கள் பைந்தமிழ் வளவன் மற்றும் செந்தமிழ் திலீபன் ஆகியோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் தமிழ்நாட்டின் தனித்துவமான சமூக நீதி களத்தை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் என்றும் துணையாக இருப்போம் என்று மாண்புமிகு முதலமைச்சரிடம் உறுதி அளித்தேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT