சென்னை,
இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 16வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஏராளமானவர்கள் பேரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தையொட்டி, பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
பேரின பெரும்பான்மைவாதத்தால் வீழ்த்தப்பட்ட மக்கள், அவர்களுக்கான நீதி மற்றும் நல்வாழ்க்கையை பெற முழு உரிமை உடையவர்கள். மனித உரிமைக்கு எதிரான எந்தவொரு அதிகாரமும் அர்த்தமற்றது.
மனித நேயத்திற்கு எதிரான எந்தவொரு ஆதிக்கமும் அப்புறப்படுத்த வேண்டியது. மனித நல்வாழ்விற்கு எதிரான அனைத்து போர்களும் எதிர்க்க வேண்டியது.
போரில்லா சமூகத்தைப் படைப்போம்!
மானுட அறத்தை உலகிற்கு சொல்வோம்!
முள்ளிவாய்க்கால் நினைவை உள்ளத்தில் ஏந்துவோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.