தமிழக செய்திகள்

எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும் வீழ்த்துவோம்: உதயநிதி ஸ்டாலின்

எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும் வீழ்த்துவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சர்வதேச தாய்மொழி நாள் இன்று. நம் அனைவரின் உயிரோடும் உணர்வோடும் கலந்த, நம் தாய்மொழி தமிழைப் போற்றி மகிழ்வோம்.

எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும், கழகத் தலைவர் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஒன்றிணைந்து வீழ்த்துவோம். என தெரிவித்துள்ளார்.