தமிழக செய்திகள்

மக்களைப் பிளவுபடுத்த நினைக்கும் சக்திகளை ஜனநாயக வழியில் தோற்கடிப்போம்: மாணிக்கம் தாகூர் எம்.பி.

தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற, சமூகநீதிப் பாரம்பரியத்தைக் காக்கும் நமது கூட்டணி அரசின் நிலைப்பாட்டைப் பாராட்டுகிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

மதவெறிக்கும், வெறுப்புப் பிரச்சாரத்திற்கும் இடமளிக்காமல் ஒற்றுமையுடன் நின்று, மக்களைப் பிளவுபடுத்த நினைக்கும் சக்திகளை ஜனநாயக வழியில் தோற்கடிப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சமூகநீதி பாரம்பரியத்தைக் காக்கும் கூட்டணி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற, சமூகநீதிப் பாரம்பரியத்தைக் காக்கும் நமது கூட்டணி அரசின் நிலைப்பாட்டைப் பாராட்டுகிறேன்.

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்.

மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, வெறுப்புப் பிரச்சாரத்தின் மூலம் தமிழ்நாட்டின் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கின்றன.

ஒன்றுபட்ட தமிழ்நாடு

தமிழ்நாடு பெரியார் மண்! பெருந்தலைவர் காமராஜர் மண்!

சமூகநீதியும் மதநல்லிணக்கமும் நமது அடையாளங்கள்!

மதவெறிக்கும், வெறுப்புப் பிரச்சாரத்திற்கும் இடமளிக்காமல் ஒற்றுமையுடன் நின்று, மக்களைப் பிளவுபடுத்த நினைக்கும் சக்திகளை ஜனநாயக வழியில் தோற்கடிப்போம்!

ஒன்றுபட்ட தமிழ்நாடு! வெறுப்புக்கு என்றும் இடமில்லை!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT