நிர்மல்குமார் 
தமிழக செய்திகள்

மேகதாது அணையை கட்ட விடமாட்டோம்; அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்

மேகதாது அணை திட்டத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளதாகவும், அதனால் மேகதாது திட்டத்துக்கு தாமதமின்றி உடனே அனுமதி தாருங்கள் என்றும் மைசூருவில் நடந்த விழாவில் பிரதமர் மோடியிடம், முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்து இருந்தார்.

மதுரை,

மதுரை மாவட்ட புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. இதனை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-புத்தக முறைகேடு என்பது தி.மு.க. அரசாங்கம் திட்டமிட்டு செய்த ஊழல். இந்த ஆட்சியில் அது நடக்காது. அரசு வக்கீல்கள் நியமன விவகாரத்தில் தகுதியானர்களுக்கு மட்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதில் சமூகநீதி, இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து திருமாவளவனிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதல்-மந்திரி சிவக்குமார் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.

தி.மு.க. வகுத்த திட்டம்

தமிழக அரசை பொறுத்தமட்டில் மேதாது அணையை கட்ட விடமாட்டோம். இதற்கான சட்ட நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும். இந்த விஷயத்தில் கர்நாடக அரசு அடாவடியாக செயல்பட்டால் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிக்கும். எனவே மத்திய அரசு, கர்நாடக அரசின் செயலை அனுமதிக்க கூடாது. கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தில் பெண் என்றும் பார்க்காமல் அவரின் படத்தை விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தி வருகின்றனர். இது முழுக்க முழுக்க பல்வேறு பிரச்சினைகளை திசைதிருப்ப தி.மு.க. வகுத்த திட்டமாகும்.ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க.வினர் கட்டபஞ்சாயத்து செய்துள்ளனர். இதில் பல்வேறு அரசியல் கட்சியினரும் சம்பந்தப் பட்டுள்ளனர்.

நீட் தேவையில்லை

இதை தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்த மு.க.ஸ்டாலினும் குற்றவாளி தான். சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு என்ற இந்திய பார் கவுன்சிலின் முடிவில் த.வெ.க. அரசுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இது குறித்து தமிழக அரசு சார்பில் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. தற்போது தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மூலம் மதிப்பெண் அடிப்படையில் தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது. எனவே, நீட் போன்ற நுழைவுத்தேர்வு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT