சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில், கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளத்தில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்தோம்.
சமத்துவத்துக்கு எதிரான பாசிஸ்ட்டுகளையும் - அவர்களுக்குத் துணை நிற்கும் அடிமைகளையும், கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வீழ்த்துவோம் என அண்ணலின் சிலைக்கு முன்பாக உறுதியேற்றோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம். என தெரிவித்துள்ளார்.