தமிழக செய்திகள்

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நிதியை பெறுவோம்: அமைச்சர் அருண்ராஜ்

குதிரை பேரம் நடத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று தவெக அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: “குதிரை பேரம் நடைபெறுவதற்கான அவசியம் இல்லை. முதல்வர் அதனை அனுமதிக்கவும் மாட்டார். மதசார்பற்ற கட்சிகள் ஆதரவு கொடுத்து கொடுத்து இருப்பதால் குதிரை பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எடப்பாடியை சந்தித்து முதல்வர் வாழ்த்து பெறுவார்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நிதியை பெற்று திட்டங்களை செயல்படுத்துவோம். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தாலும் கொள்கை ரீதியான மாநிலம் சார்ந்த நிலையை த.வெ.க அரசு கடைபிடிக்கும்” என்றார்.