கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே வாரந்திர சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை மறுநாள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வேளாங்கண்ணியில் நடைபெறும் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே வாரந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

திருவனந்தபுரம் வடக்கு - வேளாங்கண்ணி (வண்டி எண் 06115) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 29-ந்தேதி மற்றும் செப்டம்பர் 5-ந்தேதி சனிக்கிழமைகளில் (2 சேவைகள்) திருவனந்தபுரம் வடக்கில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் வடக்கு (வண்டி எண் 06116) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 30-ந்தேதி மற்றும் செப்டம்பர் 6-ந்தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் (2 சேவைகள்) வேளாங்கண்ணியில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கை சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை மறுநாள் (20-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.