தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் அமைச்சருக்காக கோவில் நடை திறந்து வைக்கப்பட்டதா? விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

அமைச்சருக்காக கோவில் நடை மதியம் ஒரு மணிக்கு பிறகும் திறந்து வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது

அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தினமும் மதியம் 12.45 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கம்.கடந்த 15-ந்தேதி தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் இந்த கோவிலில் தரிசனம் செய்தார். அமைச்சருக்காக கோவில் நடை மதியம் ஒரு மணிக்கு பிறகும் திறந்து வைக்கப்பட்டதாகவும், அமைச்சர் தரிசனம் செய்து முடித்த பின்னரே நடை சாத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.மேலும், கருவறைக்குள் சென்று அமைச்சர் தரிசனம் செய்ததாக வீடியோவும் வெளியானது. இவையெல்லாம் ஆகம விதிக்கு எதிரானது என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

அறநிலையத்துறைக்கு உத்தரவுஇந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட கோடை கால சிறப்பு டிவிஷன் பெஞ்ச் நேற்று வழக்குகளை விசாரித்தது. அப்போது கோவில் தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள்,"திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் சென்றபோது என்ன நடந்தது? கோவில் நடை அவருக்காக வழக்கமான நேரத்தை தாண்டி திறந்து வைக்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக அறநிலையத்துறை செயலாளர் அடுத்த வாரம் தாக்கல் செய்ய வேண்டும்"என்று உத்தரவிட்டன