தமிழக செய்திகள்

நெல்லை அருகே விநாயகர் சிலைகள் குப்பை போல் வீசப்பட்டனவா? - போலீசார் விளக்கம்

விநாயகர் சிலைகளை குப்பை போல் போடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

சென்னை,

நெல்லை அருகே விநாயகர் சிலைகளை வீசி எறிந்ததாக பரவும் தவறான தகவல் தொடர்பாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது;-

பரவும் செய்தி

“நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விநாயகர் சிலைகளை வீசி எறிந்து உடைத்து குப்பை போல் போட்டுள்ளனர்” என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

இது தொடர்பாக தேவர்குளம் காவல் நிலையம் அளித்துள்ள விளக்கத்தில், “தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் (PoP) கலவையால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தற்காலிகமாக வைக்கப்பட்டன. பின்னர் வன்னிக்கோனேந்தல் ஆரம்ப சுகாதார நிலைய மருந்து சேமிப்பு கிடங்கு கட்டடத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்டன. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தற்காலிகமாக சிலைகள் வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவலைப் பரப்பாதீர் !

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT