தமிழக செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் 6 முக்கிய பணிகள் என்னென்ன?

சென்னையில் நாளை முதல் 12 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னை,

முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து, இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

12 சிங்கப்பெண் படை

இந்த அதிரடிப்படையில் இடம்பெறும் பெண் போலீஸ் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நீல நிற சட்டை, காக்கி நிற பேண்ட் என சிறப்பு சீருடை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கருப்பு நிற தொப்பியும், கருப்பு நிற ஷூவும் வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை கடந்த 29-ந்தேதி அன்று முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதல்-அமைச்சர் விஜய் மாலை 5 மணிக்கு சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார்.

சென்னையில் நாளை முதல் 12 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

இதற்காக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சென்னை மாநகர் முழுவதும் காவல் மாவட்டம் வாரியாக பெண் காவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி ஒவ்வொரு மண்டல வாரியாக மேற்பார்வை அதிகாரிகளாக உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மண்டல கண்காணிப்பு அதிகாரியாக உதவி கமிஷனர் முருகேசன், மேற்கு மண்டல அதிகாரியாக உதவி கமிஷனர் ரமேஷ், கிழக்கு மண்டல அதிகாரியாக உதவி கமிஷனர் மணிமேகலை ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

1) பூக்கடை பகுதிக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, முத்து மற்றும் பெண் காவலர்கள் லலிதாம்பிகா, ஓவியா, சுதா, கார்த்திகா ஆகியோர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் இடம்பெற்றுள்ளனர்.

2) வண்ணாரப்பேட்டை பகுதிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் கிரிஜா, தரணி மற்றும் காவலர்கள் பிரியா, விஜி,கவுரி, சிவரஞ்சனி.

3) புளியந்தோப்பு பகுதிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமேகலை, லதா மற்றும் காவலர்கள் கிருஷ்ணவேணி, தீபிகா, ஆஷா, ராஜலட்சுமி ஆகியோரும் பணியில் இருப்பார்கள்.

4) அடையாறு- சப்-இன்ஸ்பெக்டர்கள் காயத்ரி, ராஜலட்சுமி, பெண் காவலர்கள் ரூபிணி, கலைச்செல்வி, அனந்த கவிதா, அனந்த குமாரி.

5) தி.நகர் - சப்-இன்ஸ்பெக்டர்கள் வாசுகி, ராஜேஸ்வரி, காவலர்கள் பிரிபா, பிரியா, விஷ்ணு பிரியா, அருணா தேவி.

6) பரங்கி மலை- சப்-இன்ஸ்பெக்டர்கள், ஜனனி, வள்ளியம்மை, காவலர்கள் பிரிய தர்ஷினி, பிரீத்தி, உமாதேவி, வசந்தா.

7) அண்ணாநகர்- சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பு லட்சுமி, கோமதி, காவலர்கள் பாரதி, ஜெனீத் ஜான்சி, திலகவதி, கவுசல்யா,

80 கொளத்தூர்- சப்-இன்ஸ்பெக்டர்கள் மீனாட்சி, உமா காவலர்கள், மேகனா, சுதா, முனியம்மாள், லீலா.

9) கோயம்பேடு- சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியா, சுஜாதா, காவலர்கள், அகிலா, புவனேஸ்வரி, சாமந்தி, அஞ்சலராணி.

10) திருவல்லிக்கேணி - சப் -இன்ஸ்பெக்டர்கள் தாரா, ஆனந்தி, காவலர்கள், மலர்க்கொடி, முத்துலட்சுமி சுபா, பூங்காவனம்.

11) மயிலாப்பூர்- சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயந்தி, சரஸ்வதி, காவலர்கள் ஆரோக்கியமேரி, பவித்ரா, சதீஷ்குமாரி, சிந்து.

12) கீழ்பாக்கம்-சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, பெனசிர் பேகம், காவலர்கள் ஆஷா, பாண்டீஸ்வரி, தீபிகா, சங்கீதா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் 6 முக்கிய பணிகள்

* பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது.

* பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்வது.

* குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது.

* காவல் துறையின் இருப்பை உறுதி செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது.

* பொறுப்புடைய அனைவரையும் ஒருங்கிணைத்து, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவது.

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மக்கள் இயக்கமாக செயல்படுவது.