சென்னை,
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
இந்த விவா தத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேச இருக்கிறார்கள். அதன்பின்னர், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த், சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் பேசுகின்றனர். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.