சென்னை,
2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கம்போல இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பட்ஜெட் உரையின்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
26. மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பைக் குறைக்கும் நோக்கத்தோடு மாநிலத்தில் 130 அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு செயல்பட்டுவருகின்றன. கருவுற்ற மையங்கள் தாய்மார்களையும், பச்சிளஞ்சிசுக்களையும் பராமரிப்பதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாகச் செயல்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்திடும் பாதுகாப்பான பிரசவங்களில், தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
அதனால், மகப்பேறு இறப்பு விகிதம், ஒரு லட்சம் மகப்பேறுக்கு 35 என்ற அளவிலும், சிசு இறப்பு விகிதம் ஆயிரம் சிசுக்களுக்கு 12 என்ற அளவிலும், தேசிய சராசரியைவிட மிகக் குறைவாகவே உள்ளது. ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினைக் களைய, 'ஊட்டச்சத்தை உறுதிசெய்' எனும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை சரிசெய்ய, பாலூட்டும் தாய்மாருக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.
27. பணிபுரியும் மகளிர் தம் பாலகரைப் பரிவுடன் உதவிடும் வகையில், அவர்கள் பணிபுரியும் 27. பணிபுரியும் பராமரிக்க தொழிற்பூங்காக்களிலேயே குழந்தைகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெருக்கடி நேரங்களில் பெண்களின் இடுக்கண் களைந்து உடனடியாக உதவிட, 'காவல் உதவி செயலி நடைமுறைக்கு வந்துள்ளது. ஆலயங்களில் ஆண் பெண் வேற்றுமையைக் களைந்திடும் வகையில், அகிலம் அறிய ஆன்மிகத் துறையில் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில், பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனையாகும்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு உரிய அதிகாரமளித்திடவும், 'தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (TNWeSafe) உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
28. பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் 10 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையாச் சொத்துகளுக்கு கடந்த ஏப்ரல் 2025 முதல் பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 3,71,705 நபர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர். மகளிரின் பாதுகாப்பிற்காகவும், அவர்கள் தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து வாழவும், தன்னிறைவுடன் தனது வாழ்வை வடிவமைத்திடவும் 'இளஞ்சிவப்பு ஆட்டோ' வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
பணிபுரியும் பெண்களை கௌரவிப்பதன் மூலமும், அவர்களது தொழில்முறை வெற்றியை வளர்த்தெடுப்பதற்கான உத்தியுடன் கூடிய முன்முயற்சிகளை செயல்படுத்துவதன் மூலமும், நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதம் பேர் தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் என்ற பெருமையை நாம் அடைந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
29. "கல்விபெறத் துடிப்போருக்கு, அவர்கள் ஏழை என்பதால் கல்வி தடைப்படாமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டியது, நல்லெண்ணம் உடையோரின் கடமையாகும்" எனும் பேரறிஞர் அண்ணாவின் கருத்தைச் சிந்தையில் தாங்கிச் செயல்படுகிறது இந்த அரசு.
30. குடும்பச் சூழல் காரணமாக, அதிகாலையில் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவிட இயலாத ஏழை எளிய தாய்மார்களின் துயரம் துடைத்து, கனவுகள் நிரம்பிய நெஞ்சுடன் கல்விச் சாலையில் அடியெடுத்துவைக்கும் அவர்தம் குழந்தைகள் பசித்த வயிற்றுடன் பாடம் படிக்க வரும் நிலையினை மாற்றி, பசி நீங்கி, ஊட்டம் பெற்று, உற்சாகத்துடன் பயின்றிட வகை செய்கிறது 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.
இத்திட்டத்தால் குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளது: கற்றல் திறன் மேம்பட்டுள்ளது. 19.34 இலட்சம் மாணவர்கள் பயனடையும் இத்திட்டத்திற்கென, கடந்த நான்கு ஆண்டுகளில் 1,284 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
31. பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்துப் பாதுகாத்திடும் வகையிலும், அக்குழந்தைகள் இடைநிற்றல் இன்றி 18 வயது வரையிலான பள்ளிப்படிப்பினைத் தொடர. மாதம் 2,000 ரூபாய் வழங்கும் 'அன்புக் கரங்கள்' திட்டத்தின் கீழ், இதுவரை 10,637 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.
32 திருநங்கைகளின் தன்மான வாழ்வுக்கு உதவிடும் நோக்கத்தோடு, அவர்கள் சுயமாகத் தொழில் செய்வதை ஊக்குவிக்க, இந்த அரசு மானியம் வழங்கிவருகிறது. திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அவர்கள் ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணிசெய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
33. முதுமையின் துயர் துடைக்க மூத்த குடிமக்களுக்குப் பகல் நேரப் பராமரிப்பு மையங்களாக 'அன்புச் சோலைகள்', 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதுமுதிர்ந்தோர் சிரமமின்றி பொருட்கள் பெறவேண்டும் என்ற மேன்மையான நோக்கத்தில், அவர்களின் இல்லத்திற்கே பொருட்களை நேரடியாகக் கொண்டு சென்று விநியோகிக்கும் முறையினை. 'தாயுமானவர் திட்டத்தின்' கீழ் இந்த அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை. 27,40,703 தகுதியுடைய பயனாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.
34.
"Democracy is not merely a form of Government. It is primarily a mode of associated living, of conjoint communicated experience. It is essentially an attitude of respect and reverence towards fellow men."
Dr. B.R.Ambedkar
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் இந்த அரசு, அவர்களுக்கு உரிய அதிகாரம் கிடைத்திடுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே முதல்முறையாக, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக நியமிக்கும் வகையில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 ஆகியவற்றில் உரிய திருத்தங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம். உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை 3,632 மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக பொறுப்பேற்றுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல் உரக்க ஒலித்திடச் செய்யும் மாற்றுத்திறனாளிகளின் குரல் உரக்க ஒலித்திடச் செய்யும் இந்நடவடிக்கை நாடெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
35. அரசு வேலைவாய்ப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு நேரடி நியமன முறையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பணி உயர்வு முறையிலும் இட ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது. தங்களைத் தாங்களே பராமரித்திட இயலாத மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் பராமரிப்புத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையினை 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக அதிகரித்ததன் மூலம் 8,52,680 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
36. 2022 ஆம் ஆண்டில், 1,774 கோடி ரூபாய் உலக வங்கியின் உதவியுடன். ஆறு ஆண்டுகளில் செயல்படுத்தக்கூடிய 'தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தினை' (TN-RIGHTS) அறிமுகப்படுத்தி, அனைத்து துறைகளின் சேவைகளை, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புற உலகச் சிந்தனை இல்லாதோருக்கு ஒருங்கிணைந்த மறுவாழ்வுச் சேவைகளை வழங்கிடும் வகையில், உயர்திறன் மையம் ஒன்று சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.
37. எல்லார்க்கும் எல்லாம் எனும் கொள்கைப் பாதையில் வழுவாது பயணித்திடும் இந்த அரசு, மாற்றுத்திறனாளிகள் மலர்ந்த முகத்துடனும், தன்மான உணர்வுடனும் தம் வாழ்வை நடத்திடும் வகையில், அவர்தம் நலனில் தனிக் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு, 2021-22 ஆம் ஆண்டில் 814 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடானது, 2025-26 ஆம் நிதியாண்டில் 1,433 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, மாற்றுத்திறனாளிகளின் நலன் காப்பதை, இந்த அரசு தலையாய கடமையாகக் கருதுவதை தெளிவாக்கும். இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1,471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.