தமிழக செய்திகள்

என் பொண்டாட்டி கூட உனக்கு என்ன வேலை? மனைவியுடன் இருந்த தவெக பிரமுகரை வீட்டினுள் வைத்து லாக் செய்த கணவர்

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டை திறந்ததும் தவெக பிரமுகர் மற்றும் சித்திரைசெல்வி இருவரும் வெளியே வந்துள்ளனர்.

சென்னை,

மனைவியுடன் இருந்த தவெக பிரமுகரை வீட்டினுள் வைத்து கணவர் லாக் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சித்திரைசெல்வி. இவர் தவெக மகளிர் அணியில் இருந்து வருகிறார். இந்த நிலையில், மகேந்திரன் இன்று காலை தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அந்தவேளை வீட்டிற்குள் நுழைய முற்பட்ட போது, தனது மனைவி சித்திரைசெல்வி தவெக பிரமுகர் முகேஷ் என்பவருடன் இருந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகேந்திரன் வீட்டை வெளிப்புறமாக பூட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டை திறந்ததும் தவெக பிரமுகர் மற்றும் சித்திரைசெல்வி இருவரும் வெளியே வந்துள்ளனர். இதனை மகேந்திரன் வீடியோவாக பதிவு செய்தார். பின்னர், போலீசார் தவெக பிரமுகர் முகேஷை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

SCROLL FOR NEXT