தமிழக செய்திகள்

நிதிஷ்குமாரின் கதி எடப்பாடி பழனிசாமிக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? - திருமாவளவன்

பொறுப்பேற்ற 4 மாதங்களேயான நிலையில், பதவியில் இருந்து விலகுவதை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

சென்னை,

கடந்த ஆண்டு தேர்தலில் என்டிஏ கூட்டணியில் வென்ற நிதிஷ்குமார் பீகார் முதல்-மந்தியாக 10வது முறையாக பொறுப்பேற்றார். பீகார் முதல்-மந்தியாக பொறுப்பேற்ற 4 மாதங்களே ஆன நிலையில் பதவியில் இருந்து விலகுவதை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட நிதிஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்ததார். இந்நிலையில், சென்னை எழும்பூரில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

“அண்ணன் எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்கள். எம்ஜிஆர் ஜெயலலிதாவும் கட்டிக் காத்த திராவிட இயக்கமான அதிமுகவை கரைய விட்டு விடாதீர்கள், காப்பாற்றுங்கள். தனித்து நின்றாலே அதிமுகவின் வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும். ஜெயலலிதா அம்மையார் இல்லாமலேயே 65-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது.

இதை முன்பே நான் கூறினேன். தற்போது, எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக வந்தால் அவரால் அந்த பதவியில் அமர முடியுமா? நிதிஷ்குமாரின் கதி எடப்பாடி பழனிசாமிக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.