நயினார் நாகேந்திரன் 
தமிழக செய்திகள்

தமிழக பெண்களை பாதுகாக்க முடியாத உங்களுக்கு முதல்அமைச்சர் பதவி எதற்கு? - நயினார் நாகேந்திரன் கேள்வி

மாற்றம் என்ற பெயரில் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்ததுதான் ஜோசப் விஜய்யின் ஆகப்பெரும் அரசியல் சாதனை! என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

தவெகவினரிடமிருந்தே தமிழக பெண்களை பாதுகாக்க முடியாத உங்களுக்கு முதல்-அமைச்சர் பதவி எதற்கு? விஜய் அவர்களே? என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-

பாலியல் தொல்லை

கள்ளக்குறிச்சி தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட பெண் கலெக்டருக்கு தவறான கண்ணோட்டத்தில் குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவலின் தாக்கம் தணிவதற்குள், கோவை காரமடை தவெக ஒன்றிய கழக செயலாளர் கருப்பசாமி என்பவர் அக்கட்சியின் பெண் நிர்வாகிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒத்துழைக்க மறுத்ததால் அப்பெண்ணை சாதி ரீதியாக பேசி அவமானப்படுத்தியதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

கண்டனம்

பெண்களை வெறும் போதை பொருளாக மட்டுமே நினைக்கும் தவெக- வினரின் ஆணவமும், அதைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் விஜய்யின் அலட்சியமும் கடும் கண்டனத்திற்குரியது.

அரசியல் சாதனை

தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 300-க்கும் அதிகமான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 30-க்கும் அதிகமான குற்றங்களில் தவெகவினர் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆனால், இதை எதையும் கண்டிக்காமல், பெண்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் நாளொரு ‘உடை’, தினமொரு ‘செயல்திறன்’ என ரீல்ஸ் போட்டு கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய். இப்படிப்பட்டவரா மாற்றத்தின் அறிகுறி? ‘மாற்றம்’ என்ற பெயரில் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது தான் ஜோசப் விஜய்யின் ஆகப்பெரும் அரசியல் சாதனை!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT