தமிழக செய்திகள்

ராகுல்காந்தி - முதல் அமைச்சர் விஜய் சந்திப்பு நடைபெறாததற்கு காரணம் என்ன.?

சென்னைக்கு வந்த ராகுல்காந்தி, முதல்வர் விஜய்யை சந்திக்கவில்லை.

சென்னை,

மாமல்லபுரத்தில் நடந்த காங்., மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்க, தமிழகத்துக்கு ராகுல் வந்தார். சென்னையில் தமிழக முதல்வர் விஜய்யை ராகுல் சந்திப்பார் என தகவல் பரவியது. ஆனால், சென்னைக்கு வந்த ராகுல், முதல்வர் விஜய்யை சந்திக்கவில்லை. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

ராகுலின் சென்னை நிகழ்ச்சி நிரலில், விஜயை சந்திக்கும் திட்டம் இல்லை என்பதை, தமிழக

காங்., தலைவர் மாணிக் கம் தாகூர் ஏற்கனவே கூறி விட்டார். விஜய், ராகுல் இருவரும் சந்திக்காததற்கு, கருத்து வேறுபாடு காரணமல்ல.

’இந்தியா’ கூட்டணி யில் இணைவது குறித்து, த.வெ.க., தலைமை எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. தமிழகத்தில், த.வெ.க., காங்., கூட்டணி அமைந்தாலும், ’இந்தியா’ கூட்ட ணியில் இணைவதாக த.வெ.க., இதுவரை அறிவிக்கவில்லை. தமிழகத்தை மையப்படுத்தி, தனித்த அரசியல் அடையாளத்தைத்தை முன்னிலைப்படுத்த த.வெ.க., விரும்புகிறது.

மேலும், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் எனவும் த.வெ.க., கருதுவதால், ’இந்தியா’ கூட்டணியில் சேர அவசரம் காட்டவில்லை. ’இந்தியா’ கூட்டணியில், த.வெ.க., இணைவது குறித்து விஜய் முடிவெடுக்காமல் இருப்பதால், சென்னைக்கு வந்த ராகுலை, அவர் சந்திக்க திட்டமிடவில்லை.”

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.