தமிழக செய்திகள்

கோவையில் இருந்து நேபாளம் சென்ற 8 பேரின் நிலை என்ன...?

ஈஷா யோகா மையம் மூலம் நேபாளம் சென்றதில் 80 பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

கோவை,

வெள்ளப்பெருக்கு

நேபாளம் சென்று அங்கிருந்து திபெத் வழியாக கயிலாய மலைக்கு பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இதுதவிர பல்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற சாகச வீரர்களும் இந்த பகுதிக்கு செல்கின்றனர். இந்த நிலையில் நேபாளத்தில் உள்ள ரசுவா மாவட்டம் போடேகோஷி நதியில் கடந்த 26-ந் தேதி பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் சிக்கி கொண்டனர்.

இதில் தற்போது வரை வெள்ளத்தில் சிக்கி இறந்த 700-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 2,500-க்கும் மேற்பட்டவர்கள் காணவில்லை என நேபாள அரசு தெரிவித்து உள்ளது. மீட்பு பணிகளில் நேபாள நாட்டின் ராணுவம் உள்பட ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று மீட்பு பணிகள் மற்றும் இறந்தவர்க ளின் உடல்களை மீட்டு வருகின்றனர்.

தமிழக பயணிகள்

நேபாளத்துக்கு சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்ட னர். இதில் 250 பேர் வரை மீட்கப்பட்டு உள்ளனர். மீதம் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.

பேரிடர் ஏற்பட்டு 5 நாட்களை கடந்த பின்னரும் கோவையில் இருந்து சுற்றுலா சென்ற 8 பேர் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்காமல் உள்ளது. அதேபோன்று ஈஷா யோகா மையம் மூலம் நேபாளம் சுற்றுலா சென்றதில் 80 பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

டெல்லிக்கு சென்ற உறவினர்கள்

கயிலாய மலை யாத்திரைக்கு கோவையில் இருந்து ஏராளமானவர்கள் சென்றனர். இதில் 40 பேரின் காத்மாண்டுவில் பத்திரமாக இருப்பது தெரியவந்தது. அதேநேரத்தில் வடவள்ளி, சாய்பாபாகாலனி, நஞ்சுண்டாபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்ற 8 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் இதுவரை யாரையும் தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்களில் சிலர் டெல்லி சென்று உள்ளனர்.

டெல்லியில் உள்ள தமிழக அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதில் நேபாள நாட்டின் நிலவரம் பற்றி உடனடியாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தங்கள் உறவினர்களை மீட்கவும், மீட்பதற்கு தேவையான தகவல்கள், உதவிகளை அளிக்கவும் சிலர் டெல்லி சென்று உள்ளனர். 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் கோவை குடும்பத்தினர் பற்றி எந்த தகவலும் இதுவரை கிடைக்காமல் உள்ளது. எனவே மாயமானவர்கள் பற்றி தகவல்களை பெறுவதற்காக தீவிர முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT