சென்னை,
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை தினமான நேற்று ஒரே நாளில் 11 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொலைகளால் அதிரும் தமிழ்நாடு... குற்றங்களால் அச்சப்படும் மக்கள்... காவல்துறைக்கே பாது காப்பில்லாத நிலை ஏற்பட்பட்டுள்ளது. மக்களின் உயிரைப் பாதுகாக்கத் தவறிய ஆட்சிக்கு என்ன தார்மீகப்பொபாறுப்பு ?
குற்றவாளிகளுக்குக் கடிவாளம் எங்கே ? சட்டம்-ஒழுங்ககைக் காப்பதில் அரசின் செயல்பாடு எங்கே? பல உயிர்கள் பறிபோனது சாதாரண நிகழ்வல்ல.
அரசின் நிர்வாகத் தோல்விக்கான அபாய எச்சரிக்கை. 11 உயிர்கள் பறிபோனதற்கு த.வெ.க. அரசின் பதில் என்ன? முதல்-அமைச்சர் விஜய் அவர்களே... தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு யாருக்கு? பொறுப்பேற்பீர் பதில் அளிப்பீர்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.