தமிழக செய்திகள்

குளம் வற்றிய பிறகு கொக்குக்கு என்ன வேலை? தவெகவில் இணைந்த செம்மலை பரபரப்பு பேட்டி

செம்மலை கடந்த மே மாதம் அதிமுகவில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

குளம் வற்றிய பிறகு கொக்குக்கு என்ன வேலை, அதிமுக கூடாரம் காலியாகி விடும் என தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.

தவெகவில் செம்மலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று நடந்த இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சரு மான விஜய் முன்னிலையில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்த தலைவருமான செம்மலை த.வெ.க. வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு முதல்-அமைச்சர் விஜய், த.வெ.க.வின் கட்சித் துண்டை அணிவித்து வரவேற்றார்.

த.வெ.க.வில் இணைந்த செம்மலை இன்று சேலத்தில் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழக வெற்றிக்கழகத்தில் நான் கால தாமதமாக சேர்ந்திருந்தாலும் ஏற்கனவே எடுத்த முடிவு தான்.த.வெ.க. வெற்றி தலைவர் விஜய் ஒரு நல்ல மனிதர், தன்னலமற்ற தலைவர். தலைமைக்கான பண்புகள் நிறைந்த தலைவர். ஒவ்வொரு குடும்பத்திலும் தன்னையும் ஒரு உறுப்பினராக கருதும் அளவுக்கு தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர். இயல்பான அவரது இந்த குணநலன்கள் என்னை கவர்ந்தன. அதைவிட இன்றைக்கும் அறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் எம். ஜி.ஆர். ஆகியோரை தனது வழிகாட்டு தலைவர்கள் என்று பிரகடனப்படுத்தினாரோ அன்றைக்கு அவரால் ஈர்க்கப்பட்டேன்.

சரியான தலைமை இல்லை

நான் இருந்த அ.தி.மு.க.வில் இருந்து விலகியதற்கு காரணம் 2017 - க்கு பிறகு அந்த இயக்கத்திற்கு சரியான தலைமை அமையவில்லை. அது மட்டுமல்ல இன்றைக்கு அந்த கட்சி பழனிசாமிக்கு சொந்தமான லிமிடெட் கம்பெனி ஆகி விட்டது. உழைப்பவர்களுக்கு அங்கு மரியாதை இல்லை. அதனால் தான் பலர் அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறினர். இருப்பவர்கள் சிலரும் தங்கள் உழைப்பு வீணாகுகிறதே என்ற மனநிலையில்

இருந்து வருகின்றனர். அவர்களும் விரைவில் விலகி விடுவார்கள். அப்போது இந்த கூடாரம் காலியாகி விடும்.

கொக்குக்கு என்ன வேலை

குளம்வற்றிய பிறகு கொக்குக்கு என்ன வேலை என்ற நிலைதான் பழனிசாமி நிலையாக இருக்கும். புரட்சித்தலைவரின் உண்மையான தொண்டர்களுக்கு வெற்றி தலைவர் விஜய்யின் அணுகுமுறை.ஆட்சி முறை பிடித்திருக்கிறது. எனவே இனி எதிர்காலம் த.வெ.க. தலைவர் வெற்றி தலைவர் விஜய்யின் கையில் தான். அவர் சாதித்த மிகப்பெரிய சாதனையாக கருதுவது மக்கள் மனங்களை வென்றது. அரசியல் கட்சித் தலைவர்கள் சாதிக்க முடியாத அரசியல் பண பலமோ, ஜாதி, மதம் தாக்கங்களுக்கு கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தவர் விஜய்.

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யால் மட்டுமே ஆட்சி முறையில் ஊழலை ஒழிப்பேன், லஞ்சம் முறை கட்டுப்படுத்துவேன், கேடுகளை களைவேன் என்று தைரியமாக சொல்ல முடியும். மற்ற தலைவர்களால் இந்த வாக்குறுதி மக்களுக்கு அளிக்க முடியாது. இவைகள் தான் த.வெ.க வெற்றி தலைவர் விஜய் தலைமையை ஏற்றுக் கொண்டதற்கு காரணங்களாகும். இவ்வாறு அவர் கூறினார்.

த.வெ.க.வில் இணைந்த செம்மலை கடந்த 1980, 1984-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொகுதியில் அ.தி. பில் போட்டியிட்டு மு.க. சார்பில் போட்டியிட்டு எம். எல்.ஏ. ஆனார். அதன்பிறகு கடந்த 2001-ம் ஆண்டு ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு, சுகாதாரத்துறை மற்றும் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தார். 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் அதிமு.க சார்பில் போட்டியிட்டுவெற்றி பெற்றார்.

இதேபோல் 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகராகவும் பணியாற்றினார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வில் மூத்த தலைவர்களிடையே ஒற்றுமை ஏற்படவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அ-தி. முக மூத்த தலைவரும், தலைமை கழக பேச்சாளருமான செம்மலை கடந்த மே மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT