கனிமொழி எம்.பி  
தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் கலெக்டருக்கு கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளது: கனிமொழி எம்.பி

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச தவெகவிற்கு என்ன அருகதை உள்ளது? என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி கலெக்டர் புகார் கொடுத்துள்ள நிலையில், அவர் மீது வழக்க்ப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.அவரத் செல்போனை பறிமுதல் செய்யவும் போலீசார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, திமுக எம்பி கனிமொழி இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

விஜய் என்ன செய்யப்போகிறார்?

முதன் முதலாக இப்படியொரு சம்பவம் நடைபெற்றது என்று திமுக சார்பில் நான் பதிவு போட்டிருந்தேன். இந்த பிரச்சினையை நாங்கள் எழுப்பிய பிறகு மற்ற கட்சிகளும் கேள்வி கேட்டு இருந்தனர். ஆனால் ஆளும் அரசுத் தரப்பில் இப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை என கூறி வந்தனர். குறிப்பாக அமைச்சர் நிர்மல் குமார், ராஜ்மோகன் எல்லாரும் இப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை. சமூக வலைத்தளத்தில் வரும் தகவல்களை வைத்து அரசியல் செய்வதாக கூறி வந்தனர். இப்போது அவர்கள் அனைவரும் சென்ன செய்யப் போகிறார்கள்.

முதல் அமைச்சர் விஜய் இப்போது என்ன செய்யப் போகிறார். தமிழ்நாட்டு பெண்களை காப்பாற்றப் போகிறேன் என்று சொல்லி ஆட்சி வந்த இவர் ஏன் இப்போது கூட வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறார். கலெக்டருக்கு கூட இந்த தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஒரு கலெக்டரால் கூட புகாரளிக்க முடியவில்லை . பெண் ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு புகார் தெரிவிக்க கலெக்டருக்கே பயம் இருக்கும் அளவுக்கு தான் நிலைமை இருப்பது தெரியவருகிறது.

விட மாட்டோம்

கடந்த ஜூலை மாதமே புகார் கொடுத்ததாக பெண் ஐஏஎஸ் அதிகாரி சொல்லியிருக்கிறார். ஆனால் இத்தனை நாட்களாக இவர்கள் ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்திற்கு போன பிறகு தான் இப்போது வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையே இல்லை என்பதால் தான் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை எல்லாம் பிறப்பித்துள்ளது. இன்னும் அரசு யாரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுத்தால் நாங்கள் இதை விடமாட்டோம்” என்றார் .

SCROLL FOR NEXT