தமிழக செய்திகள்

நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டை காக்கும் கேடயம்: மு.க.ஸ்டாலின்

உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!.. 2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்.

உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும். தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! வெல்வோம்_ஒன்றாக!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.