தமிழக செய்திகள்

வி தி லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு எப்போது? அண்ணாமலை அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் புதிய மருத்துவமனை திறப்பு விழா இன்று நடந்தது. இதில் அண்ணாமலை பங்கேற்றார்.

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை வி தி லீடர்ஸ் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். விரைவில் அரசியல் கட்சியாக இந்த அமைப்பு மாறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். இவரது அமைப்பில் இணைந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில்'வி தி லீடர்ஸ்' இயக்கத்தின் முதல் மாநாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஜுலை 12ம் தேதி நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் புதிய மருத்துவமனை திறப்பு விழா இன்று நடந்தது. இதில் அண்ணாமலை பங்கேற்றார். இந்த விழாவில் அண்ணாமலை பேசியபோது தான் மாநாட்டு அறிவிப்பை வெளியிட்டார். இதுபற்றி அண்ணாமலை கூறியதாவது: "வருகிற ஜுலை 12ம் தேதி மாலை 4 மணிக்கு பொள்ளாச்சியில் நம்முடைய 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. அன்றைய தினம் நிறைய சொந்தங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களின் அன்பு என்னை பிரமிக்க வைக்கிறது. உங்களின் அன்பு என்னுடைய கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீரை கொண்டு வருகிறது'' என்று கூறினார். அண்ணாமலை அறிவித்துள்ள இந்த மாநாடு என்பது 'போதை இல்லா பொள்ளாச்சி விழிப்புணர்வு மாநாடு என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. ஜுலை 12ம் தேதி மாலை 4 மணிக்கு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு நடக்கும் இடத்தில் இதற்கான பந்தகால் இன்று நடப்பட்டது.