தமிழக செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன்1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என சில கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கேட்டபோது, ”ஜூன் முதல் வாரத்தில் வெப்ப அலை இருக்குமா? என வானிலை துறையிடம் கேட்டு, அதன் பிறகு முதல்-அமைச்சர் விஜய்யிடம் ஆலோசித்து பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்படும்.” என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோரிடம் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்புர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.