தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்குகிறது?... வெளியானது முக்கிய தகவல்...

புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.

சென்னை,

நாடு முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் பிறகு 2021-ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக கணக்கெடுப்பு பணி தள்ளிவைக்கப்பட்டது.

தமிழகத்தில் கணக்கெடுப்பு

இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம். முதன்முறையாக டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 30 வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீடு வீடாக விபரங்கள் சேகரிப்பு. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 33 கேள்விகள் கேட்கப்படும்.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 2021 கணக்கெடுப்பு பணி. புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.