தமிழக செய்திகள்

தொகுதிகள் அதிகரித்தாலும், குறைந்தாலும் திமுகவால் வெல்ல முடியாது - மரிய வில்சன்

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகள் அதிகரித்தாலும் தவெக வெற்றி பெறும் என அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எத்தனை தொகுதிகள் அதிகரித்தாலும் தமிழகத்தில் தவெக வெற்றி பெறும் என்றும், 2029-ம் ஆண்டு தேர்தலில் திமுகவால் வெற்றி பெற முடியாது என்றும் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் விமர்சித்தார். மேலும், கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை பெரியமேட்டில் நடைபெற்ற தவெக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திமுகவை விமர்சித்து அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது:

தவெக வெற்றி பெறும்

நாம் கூட்டம் நடத்தும் நேரத்தில் வேறு ஒரு இடத்தில் வேறு ஒரு கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகள் அதிகரித்தாலும் தவெக வெற்றி பெறும்.

2029-ம் ஆண்டு தேர்தலில் திமுகவால் வெற்றி பெற முடியாது. தொகுதிகள் அதிகரித்தாலும் சரி, குறைந்தாலும் சரி, திமுகவால் வெற்றி பெற முடியாது. முதல்-அமைச்சர் விஜய்யின் கோட்டையாக தமிழ்நாடு திகழ்கிறது.

வெளிப்படையான அரசாங்கம்

நிதி ஆதாரங்களை படிப்படியாக அதிகரித்து வருகிறோம். தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் சொந்த வரி வருவாய் 12.8 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.1.7 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் ரூ.1.20 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. வெளிப்படையான அரசாங்கம் நடைபெறுவதால்தான் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.

நடவடிக்கை

கடந்த ஆட்சியில் எந்தத் துறையில் ஊழல் நடந்திருந்தாலும் அதுகுறித்த தகவல்களை கொண்டு வாருங்கள். நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தடுத்த நாட்களில் இன்னும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்படும். 2029-ம் ஆண்டு டெல்லிக்கே உங்களால் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்று மரிய வில்சன் பேசினார்.

SCROLL FOR NEXT