தமிழக செய்திகள்

தவெக பெரும்பான்மைக்கு தடை போட்ட 12 தொகுதிகள் எவை...?

10 இடங்கள் கூடுதலாக பெற்றிருந்தால் எந்த சிக்கலும் இன்றி த.வெ.க.வால் ஆட்சி அமைத்து இருக்க முடியும்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி, த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதே நேரத்தில் தனித்து ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை த.வெ.க.வால் எட்ட முடியவில்லை. 10 இடங்கள் கூடுதலாக பெற்றிருந்தால் எந்த சிக்கலும் இன்றி த.வெ.க.வால் ஆட்சி அமைத்து இருக்க முடியும்.

தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, 12 தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க. வெற்றியை பறி கொடுத்துள்ளது. இந்த தொகுதிகளில் சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. வெற்றி பெற்றிருந்தால் தேர்தல் முடிவையே மாற்றி த.வெ.க. பெரும்பான்மையை பெற்றிருக்கும்.

திருக்கோவிலூரில் 285, விக்கிரவாண்டி, குளித்தலை, பழனி, கோவில்பட்டி, ஊட்டி ஆகிய தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. திண்டுக்கல், கரூர், பாபநாசம், கிள்ளியூர், புதுக்கோட்டை, திருமயம் ஆகிய 6 தொகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க. தோல்வியை தழுவியது. இந்த 12 தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெற்றிருந்தால், பெரும்பான்மை கிடைத்திருக்கும்.

திருவண்ணாமலை, ஏற்காடு, விருத்தாசலம், கோவை தெற்கு கீழ்வேளூர் ஆகிய 5 தொகுதிகளில் 2,500 வாக்குகளில் தோல்வி ஏற்பட்டது.